வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை
நீடிப்பதால் தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
இலங்கை முதல் மேற்கு மத்திய வங்கக் கடல் வரை நீடித்துள்ள தாழ்வு
நிலையால் வட கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு
சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக காரைக்காலில் 4 செ.மீ மழை
பதிவாகியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் நாகப்பட்டினத்தில்
தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் 2 செ.மீ மழையும்,
புதுச்சேரி,சிதம்பரம் போன்ற இடங்களில் 1 செ.மீ மழை பெய்துள்ளது.
-நாகை மகாகிருஷ்ணன்