கன்னியாகுமரியில் நடந்த மாநில அளவிலான இளையோர் கைப்பந்து போட்டியில்
ஆடவர் பிரிவில் திருவாரூர் அணியும், மகளிர் பிரிவில் ஈரோடு அணியும்
கோப்பைகளை வென்றன.
கடந்த 26-ஆம் தேதி தொடங்கி, நான்கு நாட்கள் நடந்த இந்த தொடரின் ஆடவர்
பிரிவில் 20 அணிகளும், மகளிர் பிரிவில் 19 அணிகளும் பங்கேற்றன. ஆடவர் இறுதி
போட்டியில் திருவாரூர் அணியை எதிர்த்து விழுப்புரம் அணி களமிறங்கியது.
இதில் 25-18, 25-19, 25-12 என்ற புள்ளிகள் கணக்கில் திருவாரூர் அணி
வெற்றிபெற்றது.
இதேபோல் மகளிர் போட்டியில் ஈரோடு அணியுடன் மதுரை அணி பலப்பரீச்சை
நடத்தியது. இந்த போட்டியில் ஈரோடு அணி 25-15, 25-16, 25-22 என்ற புள்ளிகள்
கணக்கில் போராடி வென்றது. இந்த தொடரில் வென்றதன் மூலம் திருவாரூர்
மற்றும் ஈரோடு அணிகள், வரும் 19-ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்
நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற தகுதிபெற்ற
இணைய செய்தியாளர் -Er.மாதேஷ்